• Sun. Mar 16th, 2025

மாணவிக்கு கொரோனா தொற்று.. அரசு பள்ளி மூடல்!

நாமக்கல்லில் அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2வது அலை குறைந்ததை அடுத்து
9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

உடனடியாக பள்ளி மூடப்பட்டு, மாணவி இருந்த அறைக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதேபோல் 250 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் மருத்துவர்கள் முபீன் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோர் மாணவ, மாணவிகள் இடையே கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பரிசோதனையின் இறுதியில் தான் எத்தனை பேருக்கு கொரோனா உள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்த அதிகாரிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவி இருந்த அறை பூட்டப்பட்டு, ஒட்டுமொத்த வளாகமும் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருவதாக தெரிவித்தனர்.