நடப்புக் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..,
மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். அந்த வகையில், தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்படையாத வகையிலும், ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கும் வகையிலும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.