• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கேஸ் விலை உயர்வு.., ராமேஸ்வரத்தில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

Byவிஷா

Mar 9, 2023

மத்திய அரசின் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கடந்த வாரம் நாடு முழுவதும் சிலிண்டர் விலை முன்பிருந்ததை விட, 50 ரூபாய் உயர்த்தியுள்ளதால், ஏழை எளிய நடுத்தர மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சிலிண்டருக்கு பூ மாலை அணிவித்து, விறகு அடுப்பினைப் பயன்படுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விளைவு வியர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்றும், கடந்து எட்டு வருடத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.800 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதாகவும் கூறி கோஷங்களை எழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.