• Sat. Feb 15th, 2025

காடேஸ்வர சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் பேட்டி

ByKalamegam Viswanathan

Jan 19, 2025

புனிதமான திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு வெட்ட அனுமதிக்க கூடாது. மீறினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் -காடேஸ்வர சுப்பிரமணியம்.

திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலுக்கு சொந்தம் என ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் பேட்டி

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப் போவதாக இந்து முன்னணி கட்சியினர்அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து இன்று மாலை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் கையில் வேல் ஏந்தி அவரது தலைமையில் 300க்கும் மேற்பட்ட இந்து முன்னணிதொண்டர்கள் திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் இருந்து மலையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

மலை மேல் தீபம் ஏற்ற காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கோசமிட்டவாரு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர் .

சாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில்கடந்த 30 ஆண்டுகளாக அறநிலையத்துறையினர் தீபம் ஏற்ற மறுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தற்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை ஒரு சிலர் சிக்கந்தர் மலை என கூறுவருகின்றனர்.

இந்துக்கள் புனிதமாக கருதப்படும் மலை மேல் ஆடு ,கோழி உயிர் பலியிட முயற்சி செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலுக்கு தான் சொந்தம் என ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை மறைத்து தற்போது சிலர் சிக்கந்தர் மலை என அறிவிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் மலை மேல் கந்தூரி விழா நடத்தப் போவதாக புதிய கட்சியை அனுப்பி வருகிறார்கள் பிறகு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் இந்து முன்னணி சார்பில் அனைத்து இந்து மக்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.