• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஜூலை முதல் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றுக்கும் ஒரே டிக்கெட்

Byவிஷா

Jun 25, 2025

வரும் ஜூலை முதல் சென்னையில் பொதுப்பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியது.
இந்நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞசு கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும்.
இதன் மூலம் பொதுப் போக்குவரத்து மாநகர பகுதியில் மேலும் எளிமையாக்கப்படும், எந்தெந்த பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும் எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது குறித்த டுஐஏநு வுஐஆநு விவரங்களும் செயலில் மூலம் பயணிகள் தெரிந்துகொள்ளவும் முடியும்.ஏற்கனவே சென்னை மாநகரில் மெட்ரோ நிறுவனம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்திற்கான ஒரே பயண அட்டை திட்டம் பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் சிங்காரச் சென்னை பயண அட்டை என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது செயலி சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜூலை இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த டிக்கெட் ஆப் மூலம் பயணிகள் தங்கள் பயண தொடக்கம் மற்றும் இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும், செயலி குறைந்த நேரம் மற்றும் செலவில் செல்லக்கூடிய அனைத்து சாத்தியமான போக்குவரத்து வழிகளையும் காட்சிபடுத்தும். கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை செல்ல வேண்டும் எனில் பேருந்து, மெட்ரோ மற்றும் ஆட்டோ ஆகியவற்றின் இணைப்பு வழியைக் காண்பிக்கும் இதன் மூலம் எளிமையான முறையில் பயணிக்கலாம்.