ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சிக்காக தீவு திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இசை நிகழ்ச்சி 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது.
ஜனனி ..ஜனனி என்ற பக்திப் பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கிய இளையராஜா, பாடல்களின் இடையே திரையிசைப் பயணத்தில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். எஸ்பிபியை நினைவு கூறுவதில் இந்த மேடையை மீண்டும் பயன்படுத்துகிறேன். அவரை பற்றிக் கூற வார்த்தைகளே வரவில்லை, என்னுடை இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு என்றார். கொரோனாவால் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் மறைந்தது வருத்ததிற்குரியது என்று இளையராஜா மேடையில் வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து, மௌனராகம் பாடத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடலை எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் பாடினார்.
இந்த இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடி னார். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி,கங்கை அமரன்,பவதாரணி, கீர்த்தி உதயாநிதி என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் நீண்ட நாட்களுக்கு பின் மேடையில் காணப்பட்டார். ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ் தனது இருமகன்களுடன் கலந்து கொண்டு பாடலை கேட்டு மகிழ்ந்தார்.