இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி “ராக் வித் ராஜா”, சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.
இசைநிகழ்ச்சி முதல் பாடலாக ஜனனி ஜனனி பாடலுடன் தொடங்கியது. மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து, இளையராஜாவின் என்றும் பேவரைட் பாடலான இளமை இதோ இதோ பாடலை பாடி அசத்தினர். இந்த பாடலை மனோ பாடத் தொடங்கியதும், அங்கிருந்த ரசிகர்கள் ஆட்டம் போடத்தொடங்கினர்.
வள்ளி திரைப்படத்தில் வரும் மெல்லோடி பாடலான, ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். அதுவரை ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு அப்படியே இருக்கையில் மெய்மறந்து லாபித்து போனார்கள்.
இந்த பாடல் முடிந்தவுடன், தனுசை எழுந்திருக்கும் படி கூறிய இளையராஜா, உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல, இந்த பாடலின் மகத்தான வெற்றிக்கு, உங்க மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்ட தனுஷ் மௌனமாக சிரித்துவிட்டு, தலை ஆட்டியபடி அமைதியாய அமர்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு தனுஷ் தனது இரு மகன்களை அழைத்து வந்திருந்தார்.