எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் தனியார் மருத்துவமனையின் சார்பில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
சேலம் மூன்று ரோடு மெய்யனூர் சாலையில் உள்ள வள்ளி எழும்பியல் மற்றும் விளையாட்டு துறை மருத்துவமனையின் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த அழுத்த பரிசோதனைகள், ரத்த சர்க்கரை பரிசோதனைகள், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கிய பரிசோதனைகள், எலும்பு அடர்த்தி பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் டாக்டர் நடன சபாபதி, டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் வாசுகி ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.