ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகம் முழுவதும் வருகிற 23-03-2023 தேதி அன்று புனித ரமலான் மாதம் துவங்க உள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் காலை முதல் மாலை வரையிலும் நோன்பு இருந்து அதன் பின் மாலையில் நோன்பு திறந்து இரவு நேரம் மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடை பெறுகின்றன.மேலும் ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பு தொழுகைகள் முடியும் வரையிலும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். மேலும் இந்தாண்டு ரமலான் மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு நோன்பு கஞ்சி தயார் செய்வதற்கு 6,500 டன் அரிசி வழங்க உத்தரவுயிட்ட மாண்பு மிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.