

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வே கள்ளிப்பாளையம் பகுதியில் 14 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.
கே எஸ் கே பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார், வே கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி சாந்தினி சம்பத்குமார் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தங்களை பரிசோதனை செய்துள்ளனர்.
அவர்களுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதுகுறித்து கே எஸ் கே பவுண்டேஷன் நிறுவனர் சம்பத் குமார் கூறுகையில் நிகழ்ச்சியானது கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் 14 வது ஆண்டாக நடைபெறுவதாகவும் அவர்களது மகன் அக்ஷய ராம் பிறந்த நாளை முன்னிட்டு இக்கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டதாகவும். மேலும் கிராமப் பகுதியில் உள்ள முதியோர்களுக்கு இதுபோன்ற கண் சிகிச்சை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் இம்முகாமை ஒருங்கிணைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


