தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர்.
குலாளர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கம்பம் லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தங்கமயில் ஜூவல்லரி, ஈக்விடாஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த முகாமில், மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்தனர்.
கண் புரை, விழித்திரை பாதிப்பு, பார்வைக் குறைபாடு உள்ளோர்க்கு நவீன கருவிகள் மூலம் பிரத்தியேக பரிசோதனை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 120 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்த சக்கரை பரிசோதனையும் செய்யப்பட்டது.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளழுத்துக் குறைபாடு உள்ளோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சலுகை விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் என இருநூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை பிளெஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்கள் ஏ.கே.பார்த்திபன், தர்ஷிணி, நிதி அறங்காவலர் ‘ஏசி ஸ்டூடியோ’ குபேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், ராமர், பால்ராஜ், ஜயினுலாவுதீன், நவஜோதி, ராஜேந்திரன், ரவி, காஞ்சனா உள்ளிட்ட தன்னார்வலர்களும் செய்திருந்தனர்.