



தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது,


இந்த நிலையில் இன்றும் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, காட்ரோடு, கெங்குவார்பட்டி சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி , வடுகபட்டி, லட்சுமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 4 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

