• Sat. Apr 26th, 2025

கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு..,

ByMuruganantham. p

Mar 23, 2025

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் குவியும் சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாது போனதால் இரண்டு தினங்களுக்கு முன்பு வரை அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தை தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.