• Sat. Apr 20th, 2024

இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி!

By

Sep 8, 2021 , ,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட முறைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக 300 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முக்கிய நபர்கள் தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று குறைந்ததன் காரணமாக பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தொற்று பரவல் மேலும் கணிசமாக குறைந்ததால் இலவச தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *