• Wed. Oct 4th, 2023

மோசடிக்கு மேல் மோசடி…வீராப்பு பேசிவிட்டு சிங்காரவேலனிடம் பம்மிய நடிகர் விமல் !

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் மூன்று தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார்.தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் வீராப்பு பேசிய நடிகர் விமல் அண்ணே நீங்க தான் என்ன வளர்த்து விட்டீங்க உங்க காச நான் கண்டிப்பா கொடுத்து விடுவேன் என்று பம்மிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் மூன்று தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதில் விமல் நடிப்பில் வெளியான படங்களான “நேற்று இன்று”, “ இஷ்டம்” , “புலிவால்” , “ஜன்னல் ஓரம்” ஒரு ஊருல இரண்டு ராஜா” “காவல்”, ”அஞ்சல”, “மாப்பிளை சிங்கம்” ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியதாலும், அவருக்கு மார்க்கெட் இல்லாததாலும் விமலை வைத்து படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி பாதியில் கைவிடப்பட்ட “மன்னர் வகையறா” என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார்.

சிங்காரவேலன்

என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து “களவாணி-2” படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்க வில்லை. ஒரு கட்டத்தில் “களவாணி-2” படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ.1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாக உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன். மேலும் ஒரு அரசியல் பிரபலத்தை தொடர்பு கொண்ட விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும் படியும் கேட்டதால் 13.05.2019 அன்று சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம். இந்த செய்தி அன்றைய நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை நடிகர் விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து, புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ.1.5 கோடியை உரிய வங்கி வட்டியுடன் திருப்பித் தந்து விட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை விமல் என்னிடம் வழங்கினார்.

அதனை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த புகாரை தொடர்ந்து தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அதில் திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல தொடர்ந்து பண மோசடியில் சிக்கிய நடிகர் விமல் ஆள விடுங்க சாமி என்று கதறாத குறை போல ஆடியோ மூலம் பகிரங்கமாக பம்மிகொண்டு தங்களது பணத்தை திரும்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.அதில் வணக்கம்னே சிங்காரவேலன் அவர்களுக்கும் கோபி சார் அவர்களுக்கும் வணக்கம் என்னை மெருகேற்றி மேன்மைப் படுத்திய உங்களுக்கு முதல் என்னுடைய நன்றியை சொல்கிறேன் நான் வந்து இந்த அவமானங்கள் இந்த மன உளைச்சல் அய்யயோ என்னடா இப்டி பண்றங்க இருந்து வந்தேன். ஆனா இதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி இருக்கு, இது மூலமா சவாலா நினச்சுகிட்டு ஓடணும் கண்டிப்பா ஓடிக்கிட்டே இருப்பேன்.

நடிகர் விமல் சிங்காரவேலனிடம் பேசிய ஆடியோ

இந்த வருஷத்துக்குள்ள உங்க கடன் அடைச்சுட்டு நானும் நிம்மதியா இருப்பேன் நீங்களும் நிம்மதியா இருப்பீங்க சேர்ந்து ஜெயிப்போம். இந்த மனப்பான்மையோட ஓடுறேன் வேலி போட்டாலும் ஓடுவேன் காம்பவுண்ட் போட்டாலும் ஓடுவேன் ஏறி குதிச்சு ஓடுவேன். என்ன ஓட வச்ச உங்களுக்கு நன்றி அண்ணே என பேசியுள்ளார்.

இதை சிங்காரவேலன் நேரடியாக அழைத்து பேசி கூறியிருக்கலாம் எதற்கு அவர்கள் புகார் கொடுக்க நீங்கள் பத்திரிகையாளரை சந்தித்து அனைத்தும் போலி என் மேல் வீண் பழி சுமத்து கிறார்கள் என்று வீராப்பு வசனம் பேசிவிட்டு தற்போது அதே சிங்காரவேலனிடம் அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்னே தம்பி மாதிரி மன்னிச்சு விட்டுருங்க நான் காசு கொடுத்துடுறேன்னு பம்மிய ஆடியோ இணையத்தில் வைரலானது மட்டுமின்றி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *