• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

குளத்தில் தூர் வாருவதில் மோசடி..,

ByS.Ariyanayagam

Jun 18, 2026

திண்டுக்கல் அருகே குளத்தை தூர் வார்வதில் மோசடி நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி புதுக்குளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 20 லட்ச ரூபாய் குளம் வெட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது

ஊராட்சி நிர்வாகத்தால் குளம் வெட்டப்பட்டதா அல்லது மண் கொள்ளையர்கள் குளத்தை வெட்டினார்களா யாருக்கு மக்களின் வரிப்பணம் சென்றது.
ஒரே குளத்தில் வெவ்வேறு மூன்று கல்வெட்டுகள் வைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து
சமூக ஆர்வலர் கூறும் போது மாவட்டத்தில் 306 பஞ்சாயத்திலும் இதுபோன்ற கல்வெட்டு மட்டும் வைத்து மண் கொள்ளையர்கள் தோண்டிய இடத்திற்கு பில்லை போட்டு எடுத்துள்ளனர்.

தமிழக அரசு நேரடியாக தலையிட்டால் மட்டுமே இது போன்ற கல்வெட்டு ஊழல்களையும் அதில் மண் கொள்ளையர்கள் நடத்திய மிகப்பெரிய கனிம வள கொள்ளையையும் கண்டுபிடிக்க முடியும் என்றனர்.