சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான கணேஷ்வரி பட்டாசு ஆலை நாக்பூர் லைசன்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 50க்கு மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில் 25க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்ததில் ஒரு அரை தரைமட்டமாகி அரவிந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி தீயணைப்புத்துறையினர் இடிபாடிகளில் சிக்கிய அரவிந்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.