

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தாயில்பட்டி வழியாக அந்த காரை போலீசார் சோதனை நடத்தினர். காரில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட பட்டாசு திரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் காரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 15 பெட்டிகளில் இருந்த பட்டாசு திரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரில் வந்த நபர்கள் முன்னுக்கு முரணாக பேசினார்கள். தொடர்ந்து வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் கீழதாயில்பட்டி அருகே உள்ள முடப்பட்டிருந்த ஜெய் கங்கை பட்டாசு ஆலையில் திருடியதாக வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பி.திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (25) ,வீரமணி ( 40) தேவேந்திரன் (27 )மற்றும் டி.மேட்டூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (36 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெய் கங்கை பட்டாசு ஆலை மேலாளர் மூடப்பட்ட பட்டாசு ஆலையில் திருடு போனதாக ஏற்கனவே புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

