• Tue. Sep 17th, 2024

மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா

புதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் பெருமிதம்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சிறந்த கல்வி கொள்கைகளை ஆங்கில வழி பயிற்சி மூலமாக மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டு வருவதால் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று வருடங்களாக இடப்பற்றாக்குறையால் ஒரு பள்ளி அறையில் இரண்டு வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்க வேண்டிய சூழ்நிலையில்இருந்தனர் .கடந்த ஆண்டு புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது பழைய கட்டிடம் சிதிலமடைந்திருந்ததால் அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் ராஜனிடம் வழங்கப்பட்டு தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பெற்றோர்கள் கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ஆகியோரின் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது .

1957 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பள்ளி ஆங்கிலப் பள்ளிகளின் ஆதிக்கத்தால் படிப்படியாக குறைந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் விடாமுயற்சியால் தற்போது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 140-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பிக்கப்படுவதால் சிறந்த பள்ளிக்கான விருது கடந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed