• Thu. May 2nd, 2024

சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!

Byவிஷா

Dec 8, 2023

சென்னையில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட் பந்தயம் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
”புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக, 9, 10ம் தேதிகளில் நடக்க இருந்த பார்முலா கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது; வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பந்தயம் நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன. டிக்கெட் விற்பனையும் துவங்கி விட்டது.
இந்த நிலையில், எந்த தேதியும் குறிப்பிடாமல் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *