• Mon. Apr 29th, 2024

4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

Byவிஷா

Dec 8, 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ள மாவட்டங்களுக்கு பள்ளிவிடுமுறை அளிக்கப்பட்டு, 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருப்பின் அகற்ற வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தக்கூடாது. நிலைமை சீராகும் வரை பூட்டி வைக்க வேண்டும்.
இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டியது அவசியம். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *