உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார்.
பீகாரிலிருந்து மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார்.பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-ல் தொடங்கினார். அக்கட்சியை 2022-ல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார். இந்த சூழலில், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன. 12-ம் தேதி) இரவு அவர் உயிரிழந்தார்