• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

ByA.Tamilselvan

Jan 13, 2023

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மொத்த 27 அமர்வுகள் என 67 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடரான இதில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். மேலும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் பிறகு தொடங்கும் கூட்டத் தொடரில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.