• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் பகுதியில் வீடு வீடாக 24 மணி நேரமும் தாராளமாக விற்கப்படும் மது..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2026

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் சிதைந்து வருவதாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு, 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்து வருகிறது

தற்போது இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருவதுடன் போதை பழக்கத்தால் ஒரு குடும்பம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதுஇந்த ஆடியோ

அந்த ஆடியோவில் பேசிய பெண் கூறுகையில்

தனது கணவர் மற்றும் மகன் என இருவரும் காலையிலேயே மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தில் பெரும் தொல்லைகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் தாங்கள் கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கதறியுள்ளார்.

விஜய்க்குத் தங்களது குடும்பத்தினர் அனைவரும் வாக்களித்தது, இனி எல்லாம் மாறும், சந்தோஷமாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான்; ஆனால், விக்கிரமங்கலத்தில் மட்டும் கள்ளச் சந்தையில் வீடு வீடாக இந்த மது விற்பனை படுஜோராக நடப்பது கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தனது பேத்தி, விஜய் மாமா ஆட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று ஒரு மாத காலம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள முதலைக்குளம் கருப்புசாமி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ததாகவும், ஆனால், இது குறித்துத் தொடர்ச்சியாகப் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் பெண் தனது ஆடியோவில் கூறியுள்ளார்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மகாலிங்கம் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், தாங்கள் நேரடியாகச் சென்னை சென்று விஜயிடமே மனு அளிக்கப்போவதாகவும் அந்தப் பெண்மணி ஆடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

​இந்த ஆடியோ பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், விக்கிரமங்கலம் பகுதியில் நிலவும் இந்தச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.