இளையான்குடியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் MLA வழங்கினார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் பருவமழையால் வீடு இழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கினார்.
இளையாங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பருவமழை காரணமாக வீடு இழந்த குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன், வண்ணாரவயலை சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையாக ரூ. 4,100, அரிசி, வேஷ்டி மற்றும் சேலைகளை, முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.
பின்னர் இளையான்குடி புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் MLA நட்டார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் இளையான்குடி சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி பேரூர் கழக செயலாளர் நஜிமுதீன், வட்டாட்சியர் ஆனந்த், ஒன்றிய கவுண்சிலர் முருகன், கண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப. தமிழரசன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.