ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெறுகின்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசும்போது,
வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சந்தோஷ படுகி்ன்ற அளவிற்கு நம்முடைய விருதுநகர் மேற்கு மாவட்டம் 10ஆயிரத்திற்கு அதிகமான கழக நிர்வாகிகளையும் பொதுமக்களையும் இளைஞர்களையும் மாநாட்டில் பங்கு பெற செய்ய வேண்டும்.
வருங்காலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்திற்கே என்பதை நிருப்பிக்கும் வகையில்இந்த மாநட்டில் மிக பிரமாண்டமான எழுச்சியை கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் நடத்தி காண்பிக்க இருக்கின்றார். அவர் நடத்துகின்ற எழுச்சி மிகு மாநாட்டிற்கு நம்முடைய விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக கிளை கழக செயலாளர்கள் கிளைக்கழக பொறுப்பாளர்கள் வார்டு கழக செயலாளர்கள் வார்டுகழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப மக்களை திரட்டி கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் வாகனங்களில் தமிழக மறைந்த முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா படங்களுடன், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் படமும் பெரிதாக இருக்க வேண்டும்.
கழகத்தின் எதிர்காலமே இன்றைக்கு எடப்பாடியார்தான். அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலமும் எடப்பாடியார்தான் எடப்பாடியாருக்கு உரிய முறையில் கட்சி நிர்வாகிகள் அங்கீகாரம் கொடுத்து, அவரது பெயருக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள், கட்சி நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர போர்டு வைத்தால் எடப்பாடியார் படம் உரிய மரியாதையோடு பெரிய படமாக வை்கக வேண்டும். அதற்கு கீழ்தான் என் படம் சிரிதாக இருக்க வேண்டும். பல்வேறு சோதனைகளை தாண்டி பல்வேறு இன்னல்களை தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா, இருக்காத , தொலைந்து விடுமா என்று சொன்னவர்கள் மத்தியில் அண்ணா திமுக மிகப்பெரிய இயக்கம் என்பதை நிருபித்து இந்தியாவை ஆளுகின்ற மோடியின் அருகில் அமருகின்ற அளவிற்கு தன்னை வளர்த்து இயக்கத்தை வளர்த்து இருகின்றார் எடப்பாடியார். அடுத்து அண்ணா திமுக ஆட்சிதான் வரப்போகின்றது. எடப்பாடியார்தான் முதலமைச்சராக வரப்போகி்ன்றார்.
டில்லியில் எடப்பாடியாருக்கு கொடுத்த மரியாதையை நாம் பாத்திருக்கின்றோம். பிரதமர் மோடி அருகில் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு முக்கியத்துவம் கொடுத்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம். டில்லியில் புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிறகு நமக்கு கிடைக்க கூடிய மரியாதையை மீட்டுக்கொடுத்தவர் எடப்படியார். மதுரை மாநாட்டிற்கு பெருமளவு கழக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். மாநாடு அன்று காலையில் கழக கொடியை எடப்பாடியார் ஏற்றி வைத்து விட்டு மாநாட்டு பந்தலை மாநாடு அரஙகுகளை திறந்து வைத்து பார்வையிடுகின்றார். பகல் முழுவதிலும் மாநாட்டில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நாம் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மதியம் 1 மணிக்கு கிளம்ப வேண்டும். மாலையில் எடப்பாடியார் வீர உரையை நாம் கேட்க வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு திமுகவுக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்க வேண்டும்.
அடுத்து வரப்போவது அதிமுக ஆட்சி தான், முதல்வராக போவது எடப்பாடியார்தான் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாநாடு ஏற்பாடு குறித்து சிவகாசி ஜா போஸ் கல்யான மண்டபத்தில் வருகிற 29ம் தேதி சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிற்து. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உட்பட 13 மூத்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் விருதுநகர் மாவட்டம் எழுச்சியோடு கலந்து கொண்டது என்ற பெருமையை நாம் தட்டிச்செல்ல வேண்டும்.
திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவர்களுக்கு தற்போது நேரம் சரியில்லை. அதிமுகவுக்கு ஏறு கட்டமாய் உள்ளது. எடப்பாடியாருக்கு ராசி மிகவும் அருமையாக உள்ளது. அவர் எதிலும் வெற்றிதான் கண்டு வருகிறார். எடப்பாடியாரின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பொற்கால ஆட்சியை கொடுத்தார். எடப்பாடியார் ஆட்சிதான் தங்கமான ஆ்ட்சி என்று பொதுமக்கள் பேசுவதை நாம் கேட்க முடிகின்றது. தமிழகத்தில் 11 மெடிக்கல் கல்லூரியை வாங்கி கொடுத்தவர் எடப்பாடியார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அவர்களுக்கு அரசே கல்வி கட்டணமும் கட்டுவதிற்கு ஏற்பாடும் செய்தவர் எடப்பாடியார். இப்படி என்னேற்ற திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடியார். அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் இருந்து எடப்பாடியார் அழைக்கிறார். எனவே நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். தென் மாவட்டம் அதிமுக இரும்புக்கோட்டை என்பதை விருதுநகர் மாவட்டம் எடப்பாடியாரின் இரும்பு கோட்டை என்ற அளவில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும் என்று பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக மகளிர் அணி துணை செயலாளர் திருவில்லிபுத்துார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிவகாசி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, மாவட்ட அண்ணா தொழி்ற் சங்க செயலாளர் பாண்டியன், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அரசு பேருந்து விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.ஏ.மச்சராஜா, விருதுநகர் நகரக் கழக செயலாளர் முகமது நயினார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, வத்ராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், ராஜபாளையம் வடக்கு நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் துரைமுருகேசன், ராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பு என்ற லட்சுமிநாராயணன், சிவகாசி மாநகராட்சியின் பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், மாவட்ட மருத்துவர்அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாநகர தகவல் தொழில்நுட்பபிரிவு மாயாண்டி, தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி, மாவட்ட மீணவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், அண்ணா மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட வழக்கறிஞர் மாரிஸ்குமார், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், சேத்தூர் பேரூராட்சி கழகத்தினுடைய செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுறைபாண்டியன், மம்சாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜேஷ்குமார், வத்ராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியன் பேரூ்ர் கழக செயலாளர் மாரிமுத்து, புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயக்கிரி, சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவகாசி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, திருவில்லிபுத்தூர் நகர மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை, ஒன்றிய இளைஞரணி சங்கர், மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.