• Tue. Feb 18th, 2025

மருத்துவ உபகரணங்களை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கல்

ByG.Ranjan

Apr 27, 2024

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேனேஜிங் டிரஸ்டி சினேகலதா பொன்னையா வழங்கினார்.

காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் முஷ்டகுறிச்சி, கோபாலபுரம், அழகாபுரி மற்றும் ஆவுடையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு. யசோதாமணி, காரியாபட்டி எஸ்.பி.எம் டிரஸ்ட் நிறுவனர் எம்.அழகர்சாமி,உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.