

சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு 3_12)ல் நடைபெற உள்ள ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கான பரிசு “கப்” குமரி_சென்னை விளம்பர பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் நடை பெற்ற விழாவில் ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கி விளையாட்டு போட்டி குறித்த நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வாழ்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள 34_மாவட்டங்கள் வழியாக பயணப்பட்டு இம்மாதம் இறுதியில் (ஜூலை 30) சென்னை சென்றடைகிறது.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு திடலில் நடைபெறவுள்ளது.

