• Tue. Dec 10th, 2024

நீர்நிலைகளை காப்போம் என்று சொன்ன ஸ்டாலின் வாக்கு பொய்யானது… ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

பத்தாயிரம் கோடியில் ஏரி, கண்மாய் நீர்நிலை சீரமைப்போம் என்று அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக நேராக உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இது பற்றி மேலும் நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார்,

தமிழகத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த 28 வட்டங்கள் வேளாண் வறட்சி வட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியிலே தொடங்கியது.நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வெளியான காலத்திலே மழைப்பொழிவின் அளவு 444.80 மில்லி மீட்டராக இருந்தது. இதனால் இராமநாதபுரம் தொடங்கி ,தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குறைவாக மழை பொழிவு இருந்தது.

 இதை அடுத்து மாவட்டங்களின் ஏற்பட்டுள்ள தண்ணீர் மாறுபாடு,  ஈரப்பதளவு குறியீடு இவற்றெல்லாம் வைத்து வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையிலே தொடங்கி அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணல்மேல்குடி, தேவகோட்டை, இளையான்குடி, காளையார் கோயில், மானாமதுரை, சாக்கோட்டை, போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார் கோயில், பரமக்குடி, ஆர் எஸ் மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி,  ஆலங்குளம் கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர்,  சங்கரன் கோயில், தூத்துக்குடி, ஆழ்வார் திருநகரி, நரிக்குடி , திருச்சுழி உள்ளிட்ட 28 வட்டங்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 இப்போது நாம் இந்த வளர்ச்சி பகுதிகளெல்லாம் நாம் பார்க்கிற போது ,2013 ஆம் ஆண்டிலே மாநிலத்தில் வறட்சி பாதித்த போது புரட்சித்தலைவி அம்மா  ஒரு குழுவை அமைத்து, நேரடியாக கள ஆய்வு செய்ய வைத்து, சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய வைத்தார்.

பேரிடர் காலத்தில் வெள்ளம், மழைநீருக்கு தான் நிவாரணம் உதவி வழங்கப்படும் ஆனால் முதன் முதலில் வறட்சிக்கான நிவாரண உதவியை அம்மா வழங்கினார்.இதன் மூலம் 21.42 விவசாயிகளுக்கு 2,022 கோடியை மாநில அம்மா வழங்கினார்.

அதைத்தொடர்ந்து எடப்பாடியாரும்  2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, இழப்பை சந்தித்த விவசாய பெருமக்களுக்கு 2,247 கோடியை வழங்கினார்.

  1,132 கோடியிலே 5,586 ஏரி, கண்மாய்களை எடப்பாடியார் தூர் வாரினார் .இந்த ஒரு வரலாற்று சாதனை ஒரு விவசாயிகளுக்கு தான் இதனுடைய பலன் தெரியும். அன்னைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கூட  எடப்பாடியார் இந்த திட்டத்தை செயல்படுத்தி அதனால் மக்களிடத்தில் கிடைத்த வரவேற்பு குறிப்பாக விவசாயிடத்திலே கிடைத்த வரவேற்பு,செல்வாக்கு உயர்ந்ததை கண்டு பொறாமை கொண்டு  நாங்களும் செய்வோம் கட்சி ரீதியாக செய்து தங்களை விளம்பரப்படுத்தி கொண்டார்கள்  சாமானிய விவசாயிகளுக்கு  இந்த குடிமராமத்து திட்டம் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் விவசாயிகள் வயிற்றில் அடித்த கதையாக, இன்றைக்கு திட்டத்தை ரத்து செய்துள்ளார்கள். விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதுஇந்த அரசு அதை கண்டு கொள்வதற்கு முன் வருகிறதா? அதைப்பற்றி சிந்திக்கிறதா?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தாயிரம் கோடியில் ஏரி கண்மாய் நீர்நிலை சீரமைப்போம் என்று  திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அந்த திட்டம் கானல்நீராக உள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த 28 வட்டங்கள் வேளாண் வறட்சி வட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு உரிய வறட்சி நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என கூறினார்.