• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

Byதரணி

Oct 27, 2022

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு நரிக்குடி அருகே மறையூர் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மருதுபாண்டியர் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பூமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணை செயலாளர் வீரேசன், நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வாசுதேவன், நடிகர் பிரபாத், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மச்சராசா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.