• Fri. Apr 26th, 2024

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்!

ByA.Tamilselvan

Oct 27, 2022

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் கோவிட் பாதிப்பால் முடங்கியது. இந்தாண்டு தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தடுப்பூசி முக்கிய பங்காற்றியது. உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தாண்டும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவை அதிகம் பாதித்த நிலையில், அந்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியில் அரசு கவனம் காட்டி வருகிறது.
அங்கு இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இருப்பினும் இது அந்நாட்டின் மக்கள் தொகை வீதத்தில் மிகக் குறைவாகும். வயது வந்தோரில் 5இல் ஒருவர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் குளிர் காலம் தொடங்கவுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே உலகம் முழுவதும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் குளிர்காலம் வரவுள்ளதால், மக்கள் வீட்டுக்குள் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் வரும். இது கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பை அதிகரிக்கும். எனவே, மக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக பூஸ்டர் டோஸ் செலுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *