• Sat. Apr 26th, 2025

அதிமுக நிர்வாகி வீட்டினருக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி.

ByK Kaliraj

Mar 23, 2025

சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கிளைக்கழக நிர்வாகி காக்கா (எ) பாலமுருகன் காலமானார் செய்தி அறிந்து, அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது இரண்டு பெண்குழந்தைகளில் கல்லூரி மேற்படிப்பு செலவிற்கு, ரூ36ஆயிரம் நிதியுதவி வழங்கியும், அவர்களது கல்லூரி மேற்படிப்பு முடியும் வரையிலான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.