


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் தொடர் கனமழையினால் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கி வரும் மே மாதத்துடன் நிறைவுபெற உள்ளது. 24 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பதக்கம், உருவ பொம்மை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சூது பவள மணி, உலோகங்களான இரும்பு, ஈயம் உள்ளிட்ட சுமார் 4,1,00 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் பானை ஓடுகள், பழங்கால பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.


