புதுக்கோட்டையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் 71-பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு மாநகர அம்மா பேரவை மற்றும் புதுக்கோட்டை தெற்கு நகர கழகம் சார்பில், மேட்டுப்பட்டி சேங்கைதோப்பு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஐவர் மின்னொளி கால்பந்தாட்ட போட்டியினை முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 , இரண்டாவது பரிசாக ருபாய் 40000, மூன்றாவது பைசாக ரூபாய் 30,000 , நான்காவது பரிசாக ரூபாய் 20000 வழங்கப்பட இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 26 அணிகள் பங்கேற்றுள்ளது இந்த போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளை புதுக்கோட்டை தெற்கு மாநகர செயலாளர் சேட் (எ) அப்துல் ரஹமான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், மாநகர அம்மா பேரவை செயலாளர் KRG.பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
