மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளி பள்ளம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கேபிள் ராஜா தலைமையில், திமுகவினர் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், அவைத் தலைவர் எம். எஸ். இளங்கோவன், மாவட்ட மகளிர் அணிசந்தான லட்சுமி, ராஜமாணிக்கம், நிர்வாகிகள் காமாட்சி, பாஸ்கரன், யேசு மார்நாடு ஆனந்தன், சுந்தர்ராசு, யாகூப் கான், தெய்வம், கிருஷ்ணன், ஒன்றிய மகளிர் அணி லீலாவதி, சங்கையா, காளிமுத்து, செந்தில், சுந்தர் ,
பரமசிவம், சின்னு, காமராசு, பெரியசாமி உள்பட கிளைக் கழகநிர்வாகிகள், தொண்டர்கள். பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.