• Fri. Mar 29th, 2024

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை டெல்லியில் மருத்துவமனையில் காலமானார்.

நீதிபதி லஹோட்டி ஜூன் 1, 2004 அன்று நாட்டின் 35 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், நவம்பர் 1, 2005 அன்று ஓய்வு பெற்றார். நவம்பர் 1, 1940 இல் பிறந்தார் லஹோட்டி, 1962 இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியை தொடங்கினார். ஏப்ரல் 1977 இல், மாநில உயர்நீதிமன்ற பணிக்கு நேரடியாகப் பணியமர்த்தப்பட்டார். பின்னர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.

ஒரு ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய பிறகு, மே 1978 இல் பணியை ராஜிநாமா செய்துவிட்டு முக்கியமாக உயர்நீதிமன்றங்களில் வழக்குரைஞர் பணிக்கு திரும்பினார்.
1988 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி , நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அதன் பிறகு 1988, டிசம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *