சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதியில் 23வது அதிமுக வட்ட கழக அலுவலகத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மேற்குப் பகுதி செயலாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் அம்மா பேரவை செயலாளர் ரமணா, சிவகாசி மாநகராட்சி 30 வார்டு மாமன்ற உறுப்பினர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கா், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், 3வது வட்ட கழக செயலாளர் ராஜ்குமார், 6வது வட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ், 13வது வட்ட கழக செயலாளர் ஆறுமுகசாமி, 16 வது வட்ட கழக செயலாளர் சுரேஷ், 17 வது வட்ட கழக செயலாளர் ராஜா, 24வது வட்ட கழக செயலாளர் அன்புபிரியா மற்றும் தம்பிராஜ், அந்தோணிராஜ், பேச்சியம்மாள், நாச்சியார்யம்மாள், லாசர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 23 வது வட்ட கழக செயலாளர் செல்வின் சிறப்பாக செய்திருந்தார். கட்சி அலுவலக திறப்பு விழாவின்போது திருத்தங்கல் பனையடிப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி-அபிராமி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கார்த்தீஸ்வரி என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெயர் சூட்டினார்.
படம் விளக்கம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதியில் 23 ஆவது அதிமுக வட்ட கழக அலுவலகத்தை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று திறந்து வைத்தார்.