கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், தற்போதைய அமெரிக்கா அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதற்கு முன் இந்தியா, சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் பிற நாடுகளில் 14 நாட்கள் தங்கிய அமெரிக்க குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தான் அமெரிக்கா அரசு, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினரும், அமெரிக்க குடிமக்களும் அமெரிக்க வரலாம் என அறிவித்துள்ளது.
அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் விமானம் ஏறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டயாமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை எனவும்