குமரி மாவட்டம் காற்றாடி தட்டுப்பகுதியில் கை பேசி கோபுரம் அமைக்க அருகில் உள்ள பள்ளி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு.ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
காற்றாடித்தட்டுப்பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1200,மாணவ,மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
பள்ளியின் தலைவாசலின் அருகே ஏர்டெல் நிறுவனம் கதிர் அலைப்பரப்பு கோபுரம் அமைக்க இருப்பதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதன் பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படும் நிலையில், எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் ஏற்கனவே, தர்மபுரம் ஊராட்சி தலைவர், ராஜாக்க மங்கலம் காவல் நிலையம் என புகார் கொடுத்ததுடன், நீதி மன்றத்திலும் இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.
கை பேசி கோபுரம் அமைப்பதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், எங்கள் பகுதியில் கதிர் வீச்சு கோபுரம் அமைக்கும் பணியை, ஆட்சியர் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஊர்மக்கள் மனு கொடுத்துள்ளார்கள்.