ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி முப்படை ராணுவ தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த விழாவில் நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு கோழிக்குஞ்சுகள் மருத்துவ உதவிகள் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குதல் உடல் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வழங்குதல் அங்கன்வாடிக்கு குழந்தைகள் விளையாட பொருட்கள் அமர சேர்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் வருவாய்த்துறையினர் மற்றும் திட்ட இயக்குனர் ஜெயராமன் குன்னூர் கோட்டாட்சியர் போஷ்னகுமார் குன்னூர் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.