• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை எஸ்பி. ஹரி கிரண் பிரசாத் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்-இதில் விதி மீறி வந்த வாகனத்தின் புகைப்பட தரவு அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்-மேலும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது, தற்போது பேருந்து பயணிகளிடம் கைவரிசை காட்டும் வெளி மாவட்ட கும்பலை பிடிக்க, கண்காணிக்க ஒவ்வொரு பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் பெண் போலீஸ் மாறுவேடத்தில் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்,மிக விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார், அதேபோன்று விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை மீறாமல் சாலையில் கவனமாக வாகனங்களில் பயணிக்க வேண்டும் என பொதுமக்களை எஸ்பி ஹரி கிரண் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.