• Tue. Apr 30th, 2024

மேரி லூர்தம்மாள் சைமன்.., அகவை 111 கொண்டாட்டம்…

பெரும் தலைவர் காமராஜர் அமைச்சரவையில் தமிழகத்தின், குமரி மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சராக பதவி வகித்தவர் மேரி லூர்தம்மாள் சைமன்.

லூர்தம்மாளின் கணவர் திருகொச்சி மாநிலத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

தமிழகத்தில் 1957_யில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் லூர்தம்மாள் சைமன்.

காமராஜரின் அமைச்சரவையில் தமிழகத்தின் மற்றும் குமரி மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.

லூர்தம்மாள் சைமன் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.

இவரது காலத்தில் மீனவ கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி ,அதில் மீனவர்களை உறுப்பினர்களாக இணைத்து.

ஒவ்வொரு மீனவ கிராமங்களில் மீனவர்கள் 6_பேரை ஒரு குழுவாக்கி, குலுக்கல் முறையில் ஒவ்வொரு குழுவுக்கும் முதல் முதலாக இயந்திர மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்திய பெருமை மீனவ சமுகத்தை சேர்ந்த லூர்தம்மாள் சைமனுக்கு மட்டுமே உள்ள தனித்த பெருமை.

குளச்சலை அடுத்த கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் உள்ள சமூக கூடத்தில் இன்று மாலை (செப்டம்பர்26)யில் நடைபெற்ற அவரது 111அகவை விழாவில் அலங்கரிக்கப்பட்ட லூர்தம்மாள் சைமன் நிழல் படத்திற்கு அந்த சமுகத்தை சேர்ந்த முனைவர்.நசரேயன் பசலியான்(திமுக மாநில மீனவர் அணியின் துணை செயலாளர்) முனைவர்.தாரகை கட்பட் (தமிழக காங்கிரஸ் துணை செயலாளர்) சீமா(பாஜக அயலகதுறை தமிழக தலைவர்) ரீடன் டொனால்ட் (நாம் தமிழர் கட்சி) என பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த மீனவ சமுகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேரி லூர்தம்மாள் சைமன் அவரது வாழ் நாளில் செய்த மக்கள் நலப் பணியை இன்றைய மீனவ சமுக்கத்தினரும் நாளை வரும் இளைய சமூகமும் தொடர்ந்து பணியாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

மேரி லூர்தம்மாள் சைமனுக்கு பின்,மீனவசமுகத்தை சேர்ந்த எவரும் குமரி மாவட்டத்தில் இருந்து வேறு எவரும் எந்த கட்சியில் இருந்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத நிலையில். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மீனவர்களுக்கும், தேசிய கட்சி அல்லது மாநில கட்சிகள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

குளச்சல் துறைமுகத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்ட வேண்டும்.ஏற்கனவே கீழமணக்குடி,மேலமணக்குடி மேம்பாலத்திற்கு தமிழக அரசு லூர்தம்மாளின் பெயரை சூட்டியுள்ளதற்கு நன்றி,அதே நேரம் மணக்குடியில் மேரி லூர்தம்மாள் சைமனுக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அன்னாரின் அகவை 111_ம் நிகழ்விற்கு. கன்னியாகுமரி கடலோர அமைதி மற்றும் பாதுகாப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர், அருட்பணி கனிஷ்டன் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *