• Tue. Apr 30th, 2024

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்..!

அதிமுகவில் குமரி கிழக்கு மாவட்டச் செயலளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலையில் ஒன்றுபட்ட குமரி மாவட்டத்தின் செயலாளராக தளவாய் சுந்தரம் இருந்தார். ஒன்றுபட்ட மாவட்டத்தின் செயலாளராக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆக பதவியை பெறுவதற்கு பல்வேறு சூழலில் காய் நகர்த்திய தளவாய் சுந்தரம் கனவிலும் நினைத்து பார்க்காத மாற்றம் ஜெயலலிதாவிடம் ஏற்பட, அ தி மு க வி னர்களிலே பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஆர்.விஜயகுமாரை நாடாளுமன்ற மேலவை வேட்பாளராக அறிவித்த அடுத்த சிறிய இடைவெளியில் குமரி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் அல்ல, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியோடு குமரி மாவட்ட அ தி மு க செயலாளர் என்ற பதவியை ஆர்.விஜயகுமாருக்கு கொடுத்தது கண்ட தளவாய்சுந்தரம் மனச் சோர்வின் எல்லைக்கே போனவர்.
தோவாளை பகுதி குடும்ப அட்டையை கூட சென்னை முகவரிக்கு மாற்றி கொண்டு சில காலம் குமரி மாவட்டத்தின் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். அந்த காலகட்டத்தில் வந்த சட்டமன்ற தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதாவிடம் பரிந்து பேசி வாங்கி கொடுத்தவர். குமரி ஆரல்வாய்மொழியை சேர்ந்த ராஜம்மாள். ஜெயலலிதாவின் “கிச்சன் காபினேட்”உறுப்பினர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆஸ்ட்டின் போட்டியிட, பாஜகவின் சார்பில் மீனாதேவ் போட்டியிட, ஒரு காலத்தில் ” பிள்ளை மார்”தொகுதி என்ற நிலைத்த பெயரை பெற்றிருந்த அந்த தனி சிறப்பு பெயரை உடைத்தும் ஜெயலலிதாவே.

 பிள்ளைமார் தொகுதியில், பச்சைமாலை நிற்க வைத்து வெற்றியும் கண்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள்முதல் தொடர்ந்த அந்த இனம் சார்ந்த தொகுதி என்ற நிலை மாறியபின்  2016- சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பிள்ளை பிரிவை சேர்ந்தவர் என்ற நிலையில், அவர் சமுகம் சார்ந்த மக்களிடம். கன்னியாகுமரி தொகுதியில் அவர்களுக்கு என்று இருந்த உரிமையை இல்லாமல் செய்தவர் ஜெயலலிதா என்ற ஒரு பிரச்சாரத்தையும் சேர்ந்தே செய்த நிலையில், அதே இனத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் திமுக விடம் தோல்வி அடைய காரணமாக இருந்தது மீனாதேவ் பெற்ற 25,000-க்கும் சற்றே அதிகமான வாக்குகளை பெற்றதால்.

காலங்கள் ஓடின. ஜெயலலிதாவின் மரணம், அடுத்து சசிகலா முதல்வராக வேண்டும் என கட்சியினர்களில். தப்பித்துரை முதல், எடப்பாடி பழனிச்சாமி உட்பட சின்னம்மாவே எங்களுக்கு வழி காட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய போதும், ஜெயலலிதா மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலா தலையில் கை வைத்து இரங்கல் தெரிவித்த போதே….. பொது நிலையில் மக்கள் மத்தியில் உலா வரத் தொடங்கியது சசிகலாவின் எதிர் காலம் என்னாகுமோ.? என்ற பொது சிந்தனை நிலவிய நிலையில், டெல்லி ஆளுநரை வைத்து ஒரு நாடகம் ஆடியது. ஆளுநர் எதோ விடுப்பு எடுத்து போன மாதிரியான சூழலை ஏற்படுத்தி, நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து கர்நாடக அக்கரகாரம் சிறைக்கு சசிகலா செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமி இடம் ஆட்சியை கொடுத்து சென்றார்.
எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் ஏற்கனவே இருந்த அவரவர்கள் வகித்த துறையில் தொடர்ந்தனர். (இடையே ஓ.பன்னீர் செல்வம் சச்சரவுக்கு முன்பே. டி.டி.தினகரன் பரிந்துரையில் தளவாய் சுந்தரம் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்னும் நிலையில் தேசிய கொடி பறக்கும் வாகனத்தில் பயணப்படும் வாய்ப்பை பெற்றார்.
சட்டமன்ற தேர்தல் 2021யில் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட, கடந்த தேர்தலில் திமுக சார்பில் ஆஸ்ட்டினே தொடர்ந்து போட்டியிட, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஒரு மாற்றம். அ தி மு க., பாஜக கூட்டணி உருவானது. தளவாய்சுந்தரத்திற்கு அவரது வெற்றியில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

  தேர்தல் முடிவுகள் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி. மீண்டும் திமுக ஆட்சி ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றி. தளவாய்சுந்தரம் விசயத்தில் விதியின் ஒரு விளையாட்டு. குமரி மாவட்ட அதிமுக அரசியல் தளவாய் சுந்தரம் கட்டுபாட்டில் வந்தாலும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன ;(ஓபிஎஸ்யின் முரட்டு பக்தனாக திகழ்ந்த நிலையில்) கிழக்கு மாவட்ட அதிமுக அரசியல் ஒரு தொய்வு நிலையில் இருந்தது.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் யார்.? முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த பச்சைமால் மீண்டும் கிழக்கு மாவட்ட செயலாளராக வருவார் என்ற ஒரு அலசல் அவர்கள் கட்சியினர் மத்தியில் அலசப்பட்டு வந்தது. குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யார் என்ற கேள்விக்குறி பல காலமாக தொத்தி நின்ற நிலையில் தான்,
குலசேகரத்தில் நடந்த அண்ணாவின் 115_வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய தளவாய் சுந்தரம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில். கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகள் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என பொது வெளியில் பேசிய நிலையில். தளவாய் சுந்தரத்தின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் என இரண்டு தொகுதிகளில் போட்டிக்கு மற்றொரு காரணம் அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்திருந்தார். பாஜக பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு, பாஜகவிற்கு ஆதரவு நிலையையும் வெளிப்படுத்தினார்.
அண்ணா, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய வக்கிரம் நிலையை கண்டித்து. பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், சென்னை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தளவாய் சுந்தரம் இன்று (செப்டம்பர் – 27)ம் தேதி பிற்பகல் தான் ஊர் வந்த நிலையில். இன்று (செப்டம்பர் – 27) மாலை தலைமை கழகம் அறிவிப்பில் மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி குறித்த அறிவிப்பில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் என அறிவித்த தகவல் கட்சிக்காரர்கள் மத்தியில் பரவி வந்தது.
ஆரல்வாய்மொழி பூங்கா திடலில் நடைபெற்ற அண்ணாவின் 115-வது பிறந்த நாள் கூட்டம் ஒரு முப்பெரும் விழா கூட்டமாக மாறியது. திடல் நிறைந்த கட்சியினர் கூட்டமே எழுந்து நின்று தளவாய் சுந்தரத்தை வரவேற்று, ஆள் உயர மாலை அணிவித்து மகிழ்ந்தார்கள்.

அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் பேச்சில் உற்சாகம் வெளிப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று டயர் ஸ்கூட்டர் கொடுத்து மகிழ்ந்த தளவாய் சுந்தரம் பேச்சில் பாஜகவிலிருது விலகல் குறித்து எந்த கருத்தும் செல்லலாமால் சூசகமாக தெரிவித்த தகவல்கள் யார் மனதும் வேதனைப்படும் படி பேசவேண்டாம்.
நம் இயக்கத்தை புரட்சி தலைவர் எம்ஜிஆர், அம்மா காட்டிய வழியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயக்கப் பணியைத் தொடர்வோம், வெற்றியை காண்போம் என தெரிவித்தார்.
இன்று (செப்டம்பர்-28)ம் நாள். தளவாய் சுந்தரம் சென்னை சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து, குமரி கிழக்கு மாவட்ட தலைவராக தன்னை நியமனம் செய்ததற்கு தனது நன்றியினை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *