
பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி (SEBI) அமைப்பின் தலைவராக மதபி பூரி புக் நியமனம். முதன்முறையாக பெண் ஒருவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் செபி அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகியின் செபி பதவிக் காலம் முடிவுற்ற நிலையில், அவரிடத்தில் மாதபி நியமிக்கப்பட்டுள்ளார். அஜய் தியாகியின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இன்று முடிவடைகிறது.
மதபி சென்ற வருடம் வரை செபி அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். முதன்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் செய்தி தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளே பெரும்பாலும் செபி அமைப்பின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
