• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

6 மாவட்டங்களுக்கு
விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில்தான் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும். வங்க கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது. அதாவது சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த குழு விரைகிறது.