வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (புதன்கிழமை) புயல் சின்னமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு முதல்2 மழைப்பொழிவில் எதிர்பார்த்த மழை பெய்தது. அதன் பின்னர், மழை சற்று குறைந்திருந்தது. இதன் காரணமாக, வடகிழக்குபருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாக வேண்டிய மழைப் பொழிவைவிட 4 சதவீதம் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. –
இந்த நிலையில் வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டது. வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் இன்று உருவாக உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும், நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட […]
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]