• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

தமிழகத்தில் பரவும் ப்ளூ காய்ச்சல்!

By

Sep 15, 2021 ,

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில், அங்கங்கே மழை பெய்ய ஆரம்பித்ததின் பின்விளைவோ, என்னவோ ப்ளூ காய்ச்சல் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

அதிலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும், கோவை பகுதிகளிலும், சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

கொரோனாவின் மூன்றாவது அலை வரவாய்ப்பிருக்கிறது என்று மத்திய அரசு தரப்பிலிருந்தே பல எச்சரிக்கைகள் வந்திருக்கிற நிலையில், மருத்துவமனைகளில் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்கனவே கவனம் காட்டியிருக்கும் தமிழக அரசு ப்ளூ காய்ச்சல் விஷயத்திலும் போதிய அக்கறை காட்ட வேண்டிய அவசியமிருக்கிறது.

மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை ப்ளு காய்ச்சல் வந்து குறைத்து விடக் கூடாது. மழைக்காலத்தில் அதனால் உருவாக்கும் நோய்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அனைவருக்குமே இருக்கிறது.