மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு இன்று மாலை கலால் தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலக வாயிலை பூட்டிய பின்னர் அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சோதனை செய்தனர். அப்போது ஊழியர்கள் ஐந்து பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.52,280 கைப்பற்றப்பட்டது.

மேலும் நகராட்சி வரி வசூல் செய்த ரூ. 2,20,546 இருப்பில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




