• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு

BySubeshchandrabose

Sep 10, 2025

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் அருவிக்கு நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என தேவதானப்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.