• Sat. Mar 25th, 2023

அசானி புயல் காரணமாக விமானங்கள் ரத்து

ByA.Tamilselvan

May 10, 2022

அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்துபுறப்படக்கூடிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி புயல் என பெயரிடப்பட்டது.
அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஐதராபாத், மும்பை, ஜெய்பூர் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு ஒடிசா, ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்கும், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *